செவ்வாய், 21 ஏப்ரல், 2020

தளர்நடைப் பயணம்!!

தளர்நடைப் பயணம்!!!

பின்தங்கும் நேற்றுக்கள்
முன்னோக்கும் விடியலில்,
சிரம் கொண்ட தளர்ச்சியில்,
சிறம்பட நடந்தேன்.
ஆங்காங்கே சிதறிக் கிடந்தன பூக்கள்
வெற்று வானம் நோக்கினேன்-
திடீரென சிறு
மழைத்துளி.
மரத்தின்கண் மறைவிடம் நாடி
அகமலர்ந்த மகிழ்ச்சித் திருவிழா..

"வண்டுகள் சத்தத்தில்
சிறிய ஓட்டுக்கு டிசையில்
கணவரும் மனைவியும்
ஏழை வீட்டின் ஓட்டையை மறைத்துவிட்டு
ஜன்னலோரமாய் வீற்றிருக்க
வெள்ளமென கொட்டித்தீர்த்தாள் அம்மழை.
சிந்திய மழைத்துளிகள் கண்டன
கொட்டாங்குச்சி எனும் மறைவிடத்தை".

நேற்று சிந்திய மழைத்துளிகள்
இன்றோ பெருவெள்ளம்.
தளர்நடைப் பயணம்
கடந்தது காய்ந்தப் பூக்களை.
இன்றும் வண்டுகள் சத்தத்தில்
ஒரு ஓட்டுக் குடிசையை
நோக்கினேன்.
தூரமாய் தெரிந்த மாடியில்
ஒரு விளக்கு வினவியது
நேரமாகிறதென்று - "மனைவியாய்"
இன்று
விரைந்தேன்...

2 கருத்துகள்:

  1. இது தளர் நடை அல்ல. நடையில் ஒரு வீச்சும் வேகமும் தெரிகிறது. ஒரு புதுவெள்ளம் புறப்பட்டு வருகிறது. மகிழ்ச்சி அளிக்கிறது! சுவை மிக்க கவிதை!
    மனோகரன் சார்

    பதிலளிநீக்கு