இருட்டுக்கு வெளியே
இருட்டான ஓர் அறையில் நாற்காலியில் அமர்ந்து மனம் சிந்தித்தது.
அறையின் ஒரே ஒரு ஜன்னல் மட்டும் சிரித்து திறந்தது.
அறையின் வெளியே உலகம் - வெளிச்சம்
அறையின் உள்ளே இருட்டு - மயக்கம்.
மயக்கங்களில் இருந்து வெளியே வர மனித முயற்சி
நாளுக்கு நாள் மரமாக , செடியாக வளர்கிறது மனதினுள்.
வெளியே நிற்கும் உலகை நோக்கி பார்வை - மனிதா உன் திசையில்.
நீயே விரும்பும் உன் உலக வாழ்க்கையின் அடிப்படையில் உலகம்.
சிந்தனை குலைந்து..
அறையில் வெளிச்சம்..
மின்சாரம் கண்சிமிட்டியது.
இன்று என் அறையிலும் வெளிச்சம்
நேற்று கிடந்த இருண்ட அறை இன்று வெளியுலகிற்கு வெளிச்சம்....
எஸ் ஆனந்தி
2002

இருளையும் ஒளியை யும் இணைக்கும் கவிதை;இருள் குழப்பம், மயக்கம். ஒளி தெளிவு.சிந்தனையே மின்சாரம். ஒளியேற்றும் கவிதை!
பதிலளிநீக்குமனோகரன் சார்
Thank you for the comments sir.
பதிலளிநீக்குYour comments are more beautiful than the poem sir.Thank you.
He is more a poet than all here.
TO ....ANANDHI
***********************
நண்பர் மனோகரனின்
நல்ல வரவுகளுடன்
இன்று உன் பொருளை
எடுத்துக்கொள்.
தொடர்ந்து கடைவிரி.
சிறந்த பொருட்கள் மட்டும்
பார்வைக்கு வர வேண்டும்.
ஒருநாள் உலகம்
உனதாகும்.
...................வசந்தராஜன்.
ஒரு தந்தையின் மகளுக்கான மென்மையான அறிவுரை. சீனி பெருமிதம் கொள்கிறேன். அருமை.
Suresh uncle