ஞாயிறு, 17 நவம்பர், 2019

இறை(யின்மை)

சுமைகளுக்கப்பால்
வலிகளுக்கப்பால்
வெற்றி தோல்விகளை தந்த காலனுக்கப்பால்
தெரிந்தவை இருக்க
தெரியாதவையின் தேடலில் கிடைத்த விடையில்
அறிந்தும் அறியாததுமாகி
பிணி அகற்றி பேருதவி செய்த
மானுடனின் மகத்துவத்தை அறியாமல் இருந்ததோ
இறையின்மை.
இறை தேடலும் அவ்வழியே!!


வெள்ளி, 15 நவம்பர், 2019

மரம்

தன்னிகரற்ற மனம்
ஒரு மரம்
மறைத்தது மரும வேர்கள்
மறந்தது கவலைகளை
மனதின் சிந்தையில்
வளர்ந்தது ஓர் உலகம்
விதை விதைத்தவனே
அன்று போல் தினையருத்தான்
சீண்டிய மழைத்துளிகள்
மானுடனாய் உள்மனம்
அடைகாத்த பேருதவி‌ அந்த மரத்திற்கு
இன்று மன வலையினை தாண்டிய அச்சுறத்தல்
மரத்தினைக் களைய பெறும் முயற்சி
மனிதனே வளர்த்த மனத் தீவிரவாதம்!


திங்கள், 9 செப்டம்பர், 2019

கனவு

வருகின்ற வழியெங்கும் கற்கள் சாலையோரத்தில்
வழிகாட்டியது மானுடத்தின் பாதையை
எத்தனை கனவும் புதையல்களை புதைத்துவைத்ததோ இப்பாதை.
மனித இனம் உருவெடுத்த நாள்முதல்
காலத்தின் கல் பாறை ஒரு கனவு கேணி.
கனவின்றித் திரியும் மாக்கள் மட்டும்
மனிதனின் எண்ணப் புதையலில் முக்கியமான ஒரு அங்கம் கொண்டன.
அடி மேல் அடி வைத்தது இக் கால கண்ணாடி
எண்ணம் வாழ்நாட்களை பின்னோக்கி
சிறிது வெற்றி கொண்டு கனவுகளில் ஆடிய ஞாபகம்.
கனவு ஒருவனை கைவிடாமல் இருக்கச் செய்தது.
தவறு திருத்தி பழைய ஞாபகங்கள் இன்று புதிய முகமூடி கொண்டு
இதுவே இனி உன் வேடம் என்றது.
தோற்ற கனவுகள்
இன்று
தோற்றுவித்தது ஓர் மாற்றத்தை.
தேனினைத் தேடும் தேனியைப் போல
இன்றோ இனிய வெற்றிச்சூழைக் கண்டது - நேற்றைய நான் கண்ட கனவு.
'ஏனடா கவிஞனே' என்றது ஓர் குரல்
"கனவு" உன் வாழ்க்கையின் அங்கமடா
நீ எவ்வாறு தோல்விகளில் சரிவாய்
உன் கனவினை வென்றிட உன் பழைய தோல்விப் பக்கம் கிழிந்துவிடும் நேரம் வந்துவிட்டது.
சிந்தனை உள் அடங்கி
சீர் பெறும் புதிய புத்தகம் போல
உன் கனவுகள் அழிவுகள் அல்ல
ஒரு உருவாக்கத்தின் சின்னம்
காலம் பதில் சொல்லும் வாக்குகள்
நேரம் குறைந்ததால்
இவ்வுலகத்தின் சுழற்சிக் கணக்கு களைப்போல் தடுமாறின.
ஞாலம் ஓங்கி
கரைந்தது தோல்வி என்னும் வேறு முகம்
உன் அழைப்பை வழிநிருத்தும் உன் உலகம்.
சீர் பெற்று காலத்தை வெல்லும் உன் உருவாக்கக் கனவு
தொலைந்தது உன் மன அழுத்தம்
தொலைதூரத்து வெளிச்சம் இன்று உன் மனதினுள்
ஒரு புதிய குடை பிடித்துக் காட்டியது.
தாயின் பாசம் கண்டதைப்போல
இன்று என் மனம் சாந்தி கொண்டு
வெற்றுத் தாள்களைப் போல பெருமை என்னும் முகமூடி வேடமற்றுக் கிழிந்தது....