சனி, 1 நவம்பர், 2025

சிறிய நாற்காலி

 கிட்டத்தட்ட நூற்றாண்டு வாழ்ந்துவிட்டது

கொள்ளுத்தாத்தா கொள்ளுப்பாட்டி என

அனைவரும் வந்தமர்ந்த நாற்காலி

பின்பு அம்மா அப்பா வண்ணமடித்து

பாப்பா அமர்ந்து அழகிட்டது.

மனிதன் தான் பிறந்து வளர்ந்து,

தளர்ந்த பின்பு இறைவனடி சேர்கிறான்

ஆனால் இந்நாற்காலி அவன் பரம்பரை

அனைத்துக்கும் வசதி கொடுத்திற்று.

வயதை அறியும் மனிதன்தான்

இந்நாற்காலியின் சிறந்த காவலாளி.

என்றும் தழைக்க மானுடம் என

இறைவனை வேண்டுபவன் மனிதனே!!!

 நல்லதுக்கு செவிமெடுத்துப்பார்

வென்றுவிடும் உன் நாள்

ஓர் நாள் போய் ஓராண்டு காலம்

நல்லதையே செய்.

 சோகம் என்பது நேற்றைய நிழல்

தாகம் என்பது இன்றைய சூழல்

நேசம் என்பது தவம்கொண்ட நெறி

பாசம் என்பது நாளைய பழம்

வாழ்க முன்னூராண்டு...

 சோம்பல் ஒரு சொட்டு

காயம் மறு வேடம்

கலந்த சிறிய வாழ்வினில்

எதிர்நோக்கும் நாகரிகம் பேய்-

மத்தியில் சிக்கிய இளையவன்

சமுதாயத்தை சீர்திருத்தும்

நேர்காணலின் வரிசையில்

மிகுந்த கூட்டத்தின் கூச்சல்.

வாழ்தனில் சாதல்
இயற்க்கைக்கு அப்பால்
பிறவி பிரிவினில்
மறுபிறவி கொண்டதனால்
அமைதியின் சின்னம்.

 வாழ்க்கை என்னும் சிறிய வட்டம்

என்றென்றும் சீராட்டும் பிள்ளை

புலமையின் மேல் வரும் பித்தம்

கடந்து விட்டால் நீ - நிலைப்படும்

நேர்கோட்டு மரம்...


 கால வைபவம் - நேற்று

கடந்து இன்று வருடி

நாளை எதிர்நோக்கும்

மனித நாகரிகம்...

 செல்வந்தன் வரியவன்

கோடிக்கணக்கில் பணமாற்றம்

மனமாற்றம் என்னும் வேட்கை

சுகம் அறியா பணத்தேடல்


ஏழை எளியவன்

தன் சுகம் உள்ளூரும் குடிசையில்

பஞ்சு மெத்தை கொடுக்காதை

ஏழைக் கட்டிலில் முறை காணும் மகத்துவம்.

 இயற்க்கைத் திருவிழா

நாடும் மனிதநேயம் - பகிர்தல் உண்மை

புறாக்களும் சுமக்கும் பகிர்தலை

தன் உடன் வாழும் குஞ்சிகளின்

குதூகலம் இன்றும் - என்றென்றும்.

 சிவந்த வானம் - சருகுகள்

சுமந்த குடிசையில்

சோற்றினைச் சுமக்கும் பாட்டி முகத்தில் புன்சிரிப்பு

வந்தாடியது குழந்தைப் பேரன்.

 காற்றின் அலைவரிசை

துரு நாற்றம் விடுபட்டு

இறப்பை மறந்த மனிதன்

வாழும் வாழ்க்கை சேர்க்கையில்

உணர்ந்தது அருமை.

   நேர்முகத் காணல்

இன்றைய நிலவரம்

நேற்றையதோ

தொலைதூரப் பச்சை

வியாழன், 1 மே, 2025

மழை

 வெயில் காய்ந்து 

உரு மாறி வரும் மழை 

சாயம் வெளுத்தும் 

சீராக்கப்படும் புத்தாடை.