திங்கள், 4 மே, 2020

ஒரு நிலவு எழுந்தது!

ஒரு நிலவு எழுந்தது

சிட்டுக்குருவிகள் ஒன்றிரண்டு மரக்கிளையில் வீற்றிருக்க
சிறுவர் கூட்டம் ஓய்ந்த அந்த சாயும்
 காலத்தில்
தூரத்து நிவவதுவே வெளிச்சத்துடன் மேலேர
பட்டாம்பூச்சிகள் ஆங்காங்கே வட்டமிட்டு பறந்து வர
சிறுவர் சிறுமியர் நிலவொளியில் மகிழ்ந்து ஓடி வர
சிட்டுக்குருவிகள் அனைத்தும் கூட்டை விட்டுப் பறந்தோட
நிலவு எழும் காட்சியினை கண்ட அனைத்து ஜீவராசிகளும்
சத்தமின்றி அந்நிலவொளியில் விழாக்காலம் கொண்டன.

     எஸ் ஆனந்தி
      3/5/20

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

குழந்தை.

முதல் முத்தம்
முதல் எழுத்து
முதல் அடி
முதல் வெற்றி.

இளைஞன்.

முதல் காதல்
முதல் கவிதை
முதல் வேலை
முதல் சம்பளம்.

சம்சாரி.

முதல் குழந்தை
முதல் கோபம்
முதல் மன்னிப்பு
முதல் நரை.

முதியவர்.

முதல் இழப்பு
முதல் ஏமாற்றம்
முதல் பலவீனம்
முதல் வலி.

மீண்டும் குழந்தையாகி -
மற்றோர் அரவணைப்பில்
இறைவனை அடைய
நீண்ட பயணம்...

தளர்நடைப் பயணம்!!

தளர்நடைப் பயணம்!!!

பின்தங்கும் நேற்றுக்கள்
முன்னோக்கும் விடியலில்,
சிரம் கொண்ட தளர்ச்சியில்,
சிறம்பட நடந்தேன்.
ஆங்காங்கே சிதறிக் கிடந்தன பூக்கள்
வெற்று வானம் நோக்கினேன்-
திடீரென சிறு
மழைத்துளி.
மரத்தின்கண் மறைவிடம் நாடி
அகமலர்ந்த மகிழ்ச்சித் திருவிழா..

"வண்டுகள் சத்தத்தில்
சிறிய ஓட்டுக்கு டிசையில்
கணவரும் மனைவியும்
ஏழை வீட்டின் ஓட்டையை மறைத்துவிட்டு
ஜன்னலோரமாய் வீற்றிருக்க
வெள்ளமென கொட்டித்தீர்த்தாள் அம்மழை.
சிந்திய மழைத்துளிகள் கண்டன
கொட்டாங்குச்சி எனும் மறைவிடத்தை".

நேற்று சிந்திய மழைத்துளிகள்
இன்றோ பெருவெள்ளம்.
தளர்நடைப் பயணம்
கடந்தது காய்ந்தப் பூக்களை.
இன்றும் வண்டுகள் சத்தத்தில்
ஒரு ஓட்டுக் குடிசையை
நோக்கினேன்.
தூரமாய் தெரிந்த மாடியில்
ஒரு விளக்கு வினவியது
நேரமாகிறதென்று - "மனைவியாய்"
இன்று
விரைந்தேன்...

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

'பெண்' என்றேன்
பேரன்பு கொண்டு
நலமா என்றான்.


'தாய்' என்றேன்
அன்பின் உருவாய்
'அம்மா' என்றான்.


'சேய்' என்றேன்
அரவணைப்பில்
'குழுந்தாய்' என்றான்.


'தெய்வம்' என்றேன்
குறைகள் கூறி
'மன்னியும்' என்றான்.


'சுதந்திரம்' என்றேன்
தாகம் தீர்க்க
தண்ணீர் பந்தல் என்றான்.


'ஏழ்மை' என்றேன்
தேவை தீர்க்க
வார்த்தை என்றான்.


'காதல்' என்றேன்
கடுஞ்சொல் தந்து
வேண்டாம் என்றான்.


'பயம்' என்றேன்
பேயை விரட்டி
பாரேன் என்றான்.


'இருட்டு' என்றேன்
விளக்கு தந்து
வடிவித்து தந்தான்.


'பூசல்' என்றேன்
கானல் கண்களில்
'சாயம்'  என்றான்.


'மகிழிச்சி' என்றேன்
மனதின் அமைதியில்
'தூய்மை' என்றான்.


'ஞாலம்' என்றேன்
கதைகள் கூறி
காட்சி தந்தான்.


'குறைகள்' என்றேன்
தேவை சரிசெய்து
'மாற்று' என்றான்.


'மாற்றம்' என்றேன்
உணர்வின் மிகுதியில்
'ஏற்றம்' என்றான்.


'சீற்றம்' என்றேன்
காயம் களைந்து
'கோபம்' என்றான்...


      எஸ் ஆனந்தி
      2004

கல்லரை ரோஜா!!!

கல்லரை ரோஜா!!

செவ்வானம் பூத்திருக்க, கீழ் வானம் சிவந்திருக்க
புல்லினங்கள் இல்லங்களை சாடும் நேரத்திலே
பூவினங்கள் குவிந்து உறங்கும் வேளையிலே
மனிதன் கணவினுள் இறங்கும் நேரத்தில்
ஏனோ என் மனம் வெம்பியது.
கணவினுள் வாழும் மனிதனின் வாழ்க்கையே
கணவுகளே காணாத விலங்குகளின் நோக்கம்.
தொலைதூர வெளிச்சங்களை நோக்கிய மனிதன்
வெளிச்சமே இல்லாத ஒரு கல்லறையின் நினைவில்
ஆடி தீர்ந்துவிட்ட வாழ்க்கையில் அவன் நினைவிடம் - ஒரு கல்லரை
இருள் சூழ்ந்திருந்த அவன் இறப்பில் ஒரு வெளிச்சம்
அதுவே அக்கல்லரை ரோஜா.
முடிந்துவிட்ட வாழ்க்கையின் வெளிச்சங்களைக் கூறுகிறது.
இறப்பு என்பது உறக்கம்
பிறப்பு என்பது விழிப்பு
இரண்டையும் கூறுபவள் இந்த ரோஜா
அன்று மலர்ந்த முகம் , இன்று புன்சிரிப்பு
உன் மலர்ச்சிக்கு காரணம் என்ன என்று வினவினேன்?
வாழ்ந்து சிறக்கும் மனிதனுக்கு - இறப்பு என்பது அவன் பெறும் வெகுமதி
ஆகையால் நான் இறப்பு என்றால் நிறம் மாறுவேன்
மனிதன் இறப்பில் எனக்கு கொண்டாட்டம் இல்லை,
அவன் வாழ்வில் பெற்ற அனுபவங்களை நான் கூறுவேன்,
ஆகையால் நான் மகிழ்ந்து காணப்படுவேன், என்றது ரோஜா.
கல்லறையில் நான் கண்ட மலர்
அவன் பிறப்பில் கொடுக்கப்பட்ட அதே ரோஜா
ஆனால் இன்று
கல்லறையில்....
     எஸ் ஆனந்தி
      2002
எல்லாம் உன் கண் முன்னே
உன் மனம் மட்டும் எங்கோ சுற்றுகிறது
உன் மனத்தை உன் முன்னே கொண்டு வந்தால்
இந்த உலகத்தை நீ சுற்றலாம்..
   எஸ் ஆனந்தி
     2002



இருட்டுக்கு வெளியே!!!

இருட்டுக்கு வெளியே

இருட்டான ஓர் அறையில் நாற்காலியில் அமர்ந்து மனம் சிந்தித்தது.
அறையின் ஒரே ஒரு ஜன்னல் மட்டும் சிரித்து திறந்தது.
அறையின் வெளியே உலகம் - வெளிச்சம்
அறையின் உள்ளே இருட்டு - மயக்கம்.
மயக்கங்களில் இருந்து வெளியே வர மனித முயற்சி
நாளுக்கு நாள் மரமாக , செடியாக வளர்கிறது மனதினுள்.
வெளியே நிற்கும் உலகை நோக்கி பார்வை - மனிதா உன் திசையில்.
நீயே விரும்பும் உன் உலக வாழ்க்கையின் அடிப்படையில் உலகம்.
சிந்தனை குலைந்து..
அறையில் வெளிச்சம்..
மின்சாரம் கண்சிமிட்டியது.
இன்று என் அறையிலும் வெளிச்சம்
நேற்று கிடந்த இருண்ட அறை இன்று வெளியுலகிற்கு வெளிச்சம்....

     எஸ் ஆனந்தி
      2002

காலம் பொன்னானது!!

காலம் பொன்னானது!

 காலம் மாறும் நேரமிது
காவியம் படைக்கும் காலமிது
காலைப் பொழுது வி டிந்தவுடன்
காரியம் ஆற்றத் தொடங்கிவிடு
கல்வி பலவும் கற்றுவிடு
வாழ்க்கை என்னும் ஓடத்தை
சுலபமாய் நீயும் ஓட்டிவிடு
பெரியவர் அறிவுரை கேட்டுவிட்டு
சிறந்தவர் வாக்கை ஏற்றுவிடு
சாவும் உன்னை நெருங்கையிலே
மகிழ்வாய் கடவுளை வணங்கிவிடு...
        எஸ் ஆனந்தி
          1993

சனி, 28 மார்ச், 2020

கரோனா தந்த அமைதி தேசம்...

மனித மனதின் அமைதி
புத்த சிலையின் அமைதி
தாஜ் மஹாலின் அமைதி
குழந்தைத் தூங்கும் அமைதி
கோயில் தெய்வங்களின் அமைதி.
தினமும் என் மௌனத்தின் அமைதி
அமைதியைத் தேடி எங்கோ செல்லாமல்
இன்று அமைதியை நம் மௌனத்தில் தேடுவோம்
நம் முன்னே நிற்கும் எல்லாப் பொருள்களிலும்
உள்ள ஓர் அற்புதத்தை தேடுவோம்
அதுவே அமைதியின் குழந்தையான மௌனம்
இன்னாட்களை அமைதியில் கழிப்போம்.
விழித்துக் கொள்வோம்
வாழ சச்சரவு அவசியம் இல்லை
எல்லாம் தந்த இயற்கையில் எல்லாம் அமைதியென
சுழலும் உலகமெல்லாம் அமைதியில் தழைக்க
சிறிது காலம் விடுமுறை
நேசியுங்கள் அமைதியை...