[13/06, 11:42] E Murali: நாய்க் குட்டி
வாலை நன்றாய் ஆட்டுது
தூர நின்று குறைக்குது;
தாயை விட்டு பிறியவே
தைரியம் கொண்டு விம்முது;
குழந்தையைக் காவல் காக்குது
சமயத்தில் உதவியும் புரியுது;
செல்ல தாயும் ஆனது
இனி பயமும் விலகிப் போனது;
மீன் குட்டி
துள்ளி துள்ளி ஓடுது
நீரின் முகப்பில் முறையாடுது;
பந்து போன்ற கண்களைக்
கொண்டு பார்வை பார்க்குது;
நீரின் உள்ளே செல்லுது
சிறிய கதைகள் காட்டுது;
என்றும் நழுவி நீந்துது
தாயும் தைரியம் கொள்ளுது.
நிலா
மேலே வானத்தில் ஒரு ஆப்பம்
பாட்டி கதைகள் சொன்னாரே!
வெளிச்சம் கொண்ட கீற்றுகளும்
அப்பா சொன்னார் அது உண்மைகளே!
ஒளியும் கூடிய இன்பமென்று
அம்மா சொல்லித் தந்தாரே.
நானும் நேற்றிரவு உண்டேனே
நிலவொளியில் நன்றாக நனைந்தேனே!!
பலூன்
சின்ன சின்ன பலூன்களே
வண்ண வண்ண புத்தாடை
மெல்ல அண்ணா ஊதியே
பெரியதாய் நீயும் போனாயே
இன்னும் மேலே ஊதினால்
ஒரே கணத்தில் வெடித்தாயே
நானும் கண்டு களித்திட்டேன்
பிறந்தநாள் கண்டு வியந்திட்டேன்!!!
தம்பி
தம்பி பார்க்கும் பூச்சியே
தும்பியாய் ஆனதுவே
மெல்ல மெல்ல சிறகுகளை
விரித்து விரித்து பறந்ததுவே
தம்பி கையில் சிக்கியவுடன்
மெய்சிலிர்த்து துள்ளியதே
கையை விட்டுப் பறந்திற்று
தம்பி இருமாப்பில் அழுதிற்று!!!
கடல்
பார்க்கும் வரையில் ஒரு தூரம்
நீரின் நீளம் அடையாளம்
படகுகள் நீந்தும் நீரோடை
கப்பல் போகும் நீர்பிம்பம்
பயணங்கள் சொல்லும் காவியமே
பாட்டி சொல்லும் கதைகளே
அப்பா எப்போதும் கூட்டிச்செல்வார்
கடலோரக் களிப்பிடமே
ஏனோ மீனவர் ஒருவருக்கே
வாழ்க்கை புதிராய் போனதுவே!!
நாற்காலி
தாத்தா உட்காரும் நாற்காலி
எனக்கு எட்டவே எட்டாது
பாட்டி ஏற்றி அமர்த்திற்றார்
கையில் விசிறி கொடுத்திற்றார்
நானும் தாத்தா ஆனேனே
எனக்கு மிஞ்சியவர் எவருள்ளார்!!!
பாட்டு
அம்மா சொல்லும் பாட்டு
கேட்டு தலையை ஆட்டு
ராகம் கொண்டு பாடு
சிறிய தாளம் போடு
இன்றும் விடுமுறை நாளே
என்றும் பாட்டே ஏன்பாடே!!
விளக்கு
தீபம் ஒன்று ஏற்றினரே
ஒளியில் அதுவும் மின்னியதே
கடவுளுக்காக ஒரு தீபம்
வெளியே மூற்றத்திலோர் தீபம்
வாசல் தோறும் தீப ஒளி
அதுவே கார்த்திகை தீபத்திருநாளே
என்றென்றுமென் வீட்டில் மின்னியதே
எண்ணெய் ஊற்றிய சிறுதீபம்!!!
பறவை
மேலே மேலே பறக்குது
கீழே கீழே நாம் இருக்க
வானைச் சுற்றி ஓர் வட்டம்
இறகுகள் கொண்டு சுற்றுது
மேகம் காணச் செல்லுது
வானவில் கொஞ்சம் வரையறுத்து
உயர உயர கட்டிடங்கள்
சிறியதாய் காண முயலுது
பறக்கும் பறவை ஏரோப்பிளேனோ
இபபறவையைக் கண்டு அஞ்சுது!!!
எழுத்து
அம்மா சொல்லித் தந்தாரே
'ழ' கர 'ள' கர எழுத்துக்களே
தூய தமிழில் நாம் பேசும்
முயலும் முதல் எழுத்துக்களே
பள்ளிச் செல்லும் பிள்ளைகளே
ஆசிரியர் சொல்லும் பாடத்தை
நன்றாய் கற்றுக் கொள்வீரே!!
மா பலா வாழை
மா பலா வாழை
முக்கனிகள் இனிய சுவைதருமே
காய் பழம் பூவென்று
முக்காலத்திலும் பூத்துக் குலுங்கியதே
மாங்காய் மாம்பழம் மாவிலைகள்
மாமரம் தரும் பிள்ளைகளே
பலாமரம தரும் பலாக்காயோ
பழுத்திட்டால் பழமெனச் சுவைதருமே
வாழைப்பழம் வாழைக்காய் வாழைப்பூ
என்று சிரித்தது வாழைமரம்
அக்கா திருமணத்தில் வாழைச்செடி
நட்டு வைத்தார் அக்கணமே
வாழைமரம் போல வாழ்க்கையென
வாழும் மனிதர் பெருங்குளமே
சாதி மத பேதமின்றி
நாமும் வாழ்வோம் என்னாளும்!!!
பூச்செடி
சிறிய வண்ணப் பூக்களை
தொட்டி ஒன்றல் வளர்த்திட்டேன்
செடியும் பெரியதாய் ஆனது
அம்மா தரையில் நட்டாரே
பூச்சும் வண்ணப் பூக்ககளையும்
வந்து வந்து மோதிற்று
பூக்கள் நன்றாய் வளர்ந்தது
புழுவும் விலகிப் போனது
நாளும் நானும் தண்ணீரை
மொண்டு மொண்டு ஊத்திற்றேன்
நாமும் வளர என்செய்வீர்
உணவினைச் சரியாய் உண்பீரே
பூக்கள் போல மனம்கொண்டு
என்றும் பூச்செடி போல தழைப்பீரே!
பலகை
அப்பா அம்மா எழுதிற்றார்
பலகை என்னும் ஒரு ஏட்டில்
பல்பம் சாக்பீஸ் முதல் கொண்டு
அ ஆ இ ஈ எழுதிட்டார்
நானும் இன்று பென்சில் கொண்டு
கற்றுக் கொண்டேன் எழுத்துகளை
ரப்பர் ஸார்ப்னர் இவையின்றி
என் பென்சில் பாக்ஸ்சும் இல்லையே
ஏட்டினில் எழுத்து வரைந்தேனே
சிறந்த மாணவன் ஆனேனே!!!